நோர்வூட் சென்ஜோன் டிலரி தோட்டத்தில் கடும் காற்றினால் பாதிக்கப்பட்ட 26 வீடுகள் இரானுவத்தினரால் புனரமைப்பு


மக்கள் அரசாங்கத்திற்கும் இரானுவத்திற்கும் நன்றி தெரிவிப்பு.
ஹட்டன் கே.சந்தரலிங்கம்-
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் ஜோன் டிலரி பகுதியில் பாதிக்கப்பட்ட 27 வீடுகள் இன்று (15) இரானுத்தினரால் புனரமைத்ததனை தொடர்ந்து அம்மக்கள் இரானுவத்திற்கும் அரசாங்த்திற்கும் பாராட்டு தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் நேற்று (14) மாலை கடும் மழையுடன் பலத்த காற்றும் வீசியதன் காரணமாக அப்பகுதில் தோட்டத்தொழிலாளர்களின் தொடர் குடியிருப்புக்கள் உட்பட 27 வீடுகளின் கூரைகள் காற்றினால் அல்லூண்டு சென்றுள்ளன.
இந்த வீடுகளில் வாழ்ந்த சுமார் 27 குடும்பங்களைச் சேர்ந்த 126 பாதிக்கப்பட்டனர்.இதில் 05 வீடுகளின் கூரைகள் முற்றாகவும் எனைய வீடுகளின் கூரைகள் பகுதி அளிவிலும் சேதத்திற்கு உள்ளாகியதனை தொடர்;ந்து.இவ்விடத்தி விஜயம செய்த நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி அவர்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்ததனை தொடர்ந்து, அவர் நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவித்து அதனை தொடர்ந்து லக்ஸபான இரானுவ முகாமிலிருந்து இரானுவம் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட வீடுகளை திருத்தி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த வீடுகளில் பகுதியளவில் சேதமடைந்த 22 வீடுகள் தற்போது திருத்தி அமைக்கப்பட்டு 22 குடும்பங்கள் குறித்த வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளன.
ஏனைய முழுமையாக கூரைகள் சேதமடைந்த வீடுகளின் கூரைகள் தற்போது திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் அத்தோட்டத்தில் உள்ள மருந்தகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு தேவையான பாய்,போர்வை,மெட்ரஸ் ஆகியன நோர்வூட் பிரதேச சபையின் தலைவரின் தலைமையில் பெற்றுக்கொடுக்கப் ;பட்டுள்ளதுடன் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான சமைத்த உணவினை அம்பகமுவ பிரதேச இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கிராம சேவகர் மற்றும் தோட்ட நிர்வாகத்தின்; ஊடாக சமைத்த உணவினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கண்டறிவதற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான அவ்விடத்திற்கு சென்று அவர்களை பார்வையிட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் உத்திரவிட்டுள்ளார்.அவரின் உத்தரவுக்கமைய நோர்வூட் பிரதேச சபை அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி மற்றும் பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்...
நேற்று மாலை இப்பகுதிக்கு வீசிய கடும் காற்றினால் 27 வீடுகள் பாதிக்கப்பட்டது. அதில் 05 வீடுகளின் கூரைகள் முற்றாக சேதமடைந்தன. அவர்களை இரவோடு இரவாக தோட்டத்தில் உள்ள மருந்தகத்தில் தங்க வைக்க தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்ததுடன் இது தொடர்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். அவர் இடர் முகாமைத்து மத்திய நிலையத்திற்கு அறிவித்திருப்பதாகவும் இரானுவத்தினூடக வீடுகளை திருத்தி தருவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் எனக்கு தெரிவித்தார்.
ஆகவே தங்க வைக்கப்பட்டவர்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ளதால் கடைகளை திறந்து பெற்றுக்கொடுத்தேன். இப்போது பெருவாரியான வீடுகள் திருத்தப்பட்டுள்ளன. ஏனைய வீடுகளும் திருத்து வேலைகள் நடைபெற்று வருகின்றன. சில வீடுகளுக்கு தேவையான கூரைத்தகடுகள் பெற்றுக்கொள்வதில் உள்ள சிககல் நிலை காணரமாகவே தாமதமடைகின்றது. நாளை தினம் இவர்களின் வாழ்ககை வழமைக்கு திரும்பிவிடும் என தெரிவித்தார்.
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவி;க்கையில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் காற்றினால் நாங்கள் பெரும் பாதிப்புக்குள்ளானோம.; ஆனால் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் மற்றும் தோட்ட நிர்வாகம் ஆகியன வந்து எமக்கு உதவிகளை செய்தது இன்று இரானும் வந்து எங்களது பாதிக்கப்பட்ட வீடுகளின் கூரைகளை திருத்தி கொடுத்துள்ளன.
உடனடியாக இவர்கள் செயப்பட்டதற்காக இரானுவத்திற்கும் நோர்வூட் பிரதேச சபைக்கும் ,அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -