இத்தாலியிலும் 20,000-த்தைக் கடந்த உயிரிழப்பு!
பிரிட்டனில் கொரோனாவால் இதுவரை 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கும் நிலையில் அமெரிக்காவில் உயிரிழப்பு 23 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலக அளவில் 5 ஆயிரத்து 423 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் ஆயிரத்து 535 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதன்மூலம் அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரமாக உள்ளது. மார்ச் 30-க்குப் பிறகு அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சராசரியாக 23 ஆயிரமாக உள்ளது.
ஸ்பெய்னில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 600 பேர் வரை உயிரிழக்கின்றனர். அதேசமயம் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து இத்தாலியிலும் கொரோனா உயிரிழப்பு 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கொரோனாவின் கொடிய தாக்குதலால் பிரான்சில் ஊரடங்கு உத்தரவு மே 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 ஆயிரத்து 967 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டிய போதும் உயிரிழப்பு கட்டுக்குள் உள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் இதுவரை 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.