UK பிரதமருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் வீட்டிலிலிருந்தே நாட்டை வழி நடத்துவேன் என தெரிவித்துள்ளார்.

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

UK பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று UK பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உலக நாடொன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியிருப்பது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸூக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போரிஸ் ஜோன்சனுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவர் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UKயின் மருத்துவ பேராசிரியர் கிறிஸ் விட்டியின் ஆலோசனைக்கமைய UK பிரதமருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்று UK பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸின் பாதிப்பு இருப்பது உறுதி செய்தபின், UKயை வீட்டிலிருந்து தொடர்ந்து வழி நடத்துவேன் என்று UK பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

"நான் கொரோனா வைரஸின் லேசான அறிகுறிகளே எனக்குள்ளது. அது ஒரு வெப்பநிலை மற்றும் தொடர்ச்சியான இருமல்" என்று UK பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.

பிரதான வைத்திய நிபுணரின் ஆலோசனையின் பேரில், நான் ஒரு சோதனை எடுத்துள்ளேன், அது நேர்மறையாக வெளிவந்துள்ளது.
"நான் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன், என்னை சுயமாக தனிமைப்படுத்தி கொண்டேன். அது முற்றிலும் சரியானது.
"தொழில்நுட்பத்திற்கு நன்றி, எனது உயர்மட்ட குழுவுடன் தொடர்புகொண்டு கொரோனா வைரஸுக்கு எதிரான போருக்கு UKயில் வழி நடத்துவேன் என கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -