UKயின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் விரைவில் 3வது திருமணம்.




ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

UKயில் சமீபத்தில் நடந்த பாரளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தவர் பிரதமர் போரிஸ் ஜோன்சன். இவருக்கு வயது 55. இவர் தன்னை விட 24 வயது குறைந்த கேரி சைமண்ட்ஸ் ( 31 வயது ) என்ற பெண்ணை காதலித்து வருகிறார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், அவருடன் சேர்ந்து வாழ்கிறார்.
லண்டனில், இலக்கம் 10, டவுனிங் வீதியிலுள்ள பிரதமரின் இல்லத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் குடியேறிய முதல் பிரதமர் ஜோடி என்ற பெயரும் இவருக்கு கிடைத்துள்ளது.
இதேபோன்று கடந்த பல நூற்றாண்டுகளில் ஒரு பிரதமரின் மிக இளம் வயது வாழ்க்கை துணைவி என்ற பெயரை கேரி சைமண்ட்ஸ் பெற்றுள்ளார்.

மேலும், நாட்டின் 200 வருட கால வரலாற்றில் பிரதமர் பதவியில் இருந்தவாறு திருமணம் செய்து கொள்ளப்போகிற முதல் பிரதமர் என்ற பெயரையும் போரிஸ் ஜோன்சன் பெறுகிறார்.
தற்போது கேரி சைமண்ட்ஸ் கர்ப்பமாகவுள்ளார். இவருக்கு அடுத்த சில மாதங்களில் குழந்தை பிறக்கவுள்ளது. இந் நிலையில் அவரை திருமணம் செய்து கொள்ள போரிஸ் ஜோன்சன் முடிவு செய்து, அதற்கான நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்துள்ளது. இதை கேரி சைமண்ட்ஸ், சமூக வலைத்தளத்திலும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் கேரி சைமண்ட்ஸ் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் திருமணமா, பெறுவதற்கு முன்னரே திருமணமா என்பது தெரிய வரவில்லை.

இருப்பினும் பிரதமர் பதவியில் இருந்த போது குழந்தை பெற்றுக்கொண்ட முதல் தம்பதியாக முன்னர் பிரதமர் பதவி வகித்த டேவிட் கமரூன், சமந்தா தம்பதியுள்ளனர்.
போரிஸ் ஜோன்சனை பொறுத்தவரை 1வது மனைவி அலெக்ரா மொஸ்டின் ஒவனுடன் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தபோது இருவரும் காதலித்து, 1987ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். 6 வருடங்களின் பின்னர் அந்த திருமணம் முறிந்து போனது.
பின்னர் 1993ம் ஆண்டில் சட்டத்தரனியான மெரினா வீலர் என்ற பெண்ணை போரிஸ் ஜோன்சன் 2வதாக திருமணம் செய்து கொண்டார். இளம்வயது முதல் நண்பர்களாக இருந்து, திருமண வாழ்வில் இணைந்த இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2018ம் ஆண்டில் பிரிந்து விட்டனர்.
அதைத் தொடர்ந்துதான் கேரி சைமண்ட்சுடன் போரிஸ் ஜோன்சன் பழக ஆரம்பித்து, அவர் கர்ப்பமாக உள்ளார். அவருடன் 3வது திருமணமும் நடைபெறவுள்ளது.
இந்த கேரி சைமண்ட்ஸ், கன்சர்வேடிவ் கட்சியில் சேர்ந்து பணியாற்றியவர், 2010ம் ஆண்டில் நடைபெற்ற லண்டன் மேயர் தேர்தலில் போரிஸ் ஜோன்சனுக்காக பிரசாரம் செய்தவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -