சிலோன் மீடியா போரத்தினால் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு முககவசம் (Face Mask) வழங்கி வைப்பு!

ஷய்பான் அப்துல்லாஹ்-

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான செய்திகளை களத்தில் நின்று வழங்கும் பிராந்திய ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் முகமாக சிலோன் மீடியா போரம் 'ஊடகவியலாளர்களைப் பாதுகாப்போம்' எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக முககவசம் (குயஉந ஆயளம) வழங்கும் நிகழ்வு இன்று (23) திங்கட்கிழமை சாய்;ந்தமருதிலுள்ள சிலோன் மீடியா போரத்தின் தலைவர் இல்லத்தில் இடம்பெற்றது.

சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ, மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வீதி அபிவிருத்தி தினணக்கள பொறியியலாளரும் உலக வங்கியின் மாகாண வீதி அபிவிருத்தி திட்ட உதவி வதிவிட பொறியியலாளரும் பட்டய பொறியியலாளருமான எம்.எம்.எம். முனாஸ் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் பணிப்பாளர்களான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரப் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர், அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர், அமைப்பின் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித்;, பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான் உள்ளிட்ட மாவட்ட ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -