ரோச் மருந்து நிறுவனம் கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை கண்டுபிடித்து விட்டதா?


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
லகத் தரம் வாய்ந்த சுவிட்ஸ்ர்லாந்த்தின் மருந்து நிறுவனமான ரோச் ( Roche ) கொரோனா வைரஸூக்கு தடுப்பு ஊசியை கண்டுபிடித்து விட்டதாக வட்ஸ் அப்பில் உலா வரும் செய்தியின் உண்மைத் தன்மையை பார்ப்போம்.

உலக வரலாற்றிலேயே கொரோனா வைரஸப் போல் மக்களை பீதிக்குள்ளாக்கிய தொற்று நோய் எதுவும் இருக்க முடியாது எனும் அளவுக்கு நிலைமை உலகம் பூராகவும்
கைமீறி போய் விட்டது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று பரவும் காலங்களில் அதை விட வேகமாக வதந்திகளும், தவறான செய்திகளும் பரவி விடுகிறது. அந்த வகையில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு ஊசியை பிரபல ரோச் மருந்து நிறுவனம் கண்டுபிடித்து விட்டதாக சில நாட்களாக வட்ஸ்அப்பில் தகவலொன்று உலா வருகிறது. இந்த தடுப்பு ஊசியை போட்ட 3 மணித்தியாலத்தில் அந்த தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்பாட்டில் வைப்பதாக அந்த போர்வேர்ட் ( Forwarded ) மெஸேஜில் கூறப்பட்டுள்ளது.
இந்த தடுப்பு ஊசி வருகிற எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் உலகெங்கும் விற்பனைக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பதாக அந்த மெஸேஜில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவல் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யான ஒன்றாகும். இதுபோன்ற அறிவிப்பு எதையும் அமெரிக்கா ஜனாதிபதி வெளியிடவில்லை.

கொரோனா வைரஸிற்கான நோயறிதலுக்கான பரிசோதனையை மேற்கொள்ள மட்டுமே ரோச் நிறுவனத்திற்கு அவசரமாக அமெரிக்கா ஜனாதிபதியால்
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ் தடுப்பூசிக்கான அனுமதியல்ல என்று தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -