2½ மணி நேரத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கலாம் - Bosch


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்கும் சோதனைக்கு இப்போது பல நாட்கள் அவகாசம் தேவைப்படும் நிலையில், சுமார் 2½ மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்கும் விரைவான சோதனை முறையை உருவாக்கியுள்ளதாக உலகத் தரம் வாய்ந்த ஜேர்மனியின் மருத்துவ ஆய்வு நிறுவனமான போஷ் (Bosch) தெரிவித்துள்ளது.
இதற்காக Vivalytic molecular diagnostics platform என்ற சோதனை முறையை உருவாக்கியுள்ளதாக Bosch நிறுவனம் கூறியுள்ளது.
உலகளவில் கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் இந்த புதிய பரிசோதனை முறை உதவிகரமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனை முறை ஏற்கனவே நிமோனியா, இன்புளூவன்சா போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டாலும், இப்போது அது கொரோனாவை கண்டு பிடிக்கும் வகையில் புதிய மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -