அஸ்ரப் ஏ சமத்-
கல்வியமைச்சின் கீழ் உள்ள பிரபல தேசிய பாடசாலைகளது கிறிக்கட் சுற்றுப் போட்டி பெப்ரவரி 28 முதல் மாா்ச் 15 திகதி வரை கொழும்பு , கண்டி, யாழ்பாணம் , மொரட்டுவை விளையாட்டு மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. அதில் நாலாந்தா - ஆனாந்தாவின் கிறிக்கட் போட்டி 7ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றது.. ஆனாந்தா பழைய மாணவரும் ஜானதிபதியுமான கோட்டாபாயவும் பாா்வையாளா்களராக வருகை தந்திருந்தாா். அத்துடன் இரண்டு பாடசாலைகளும் கடந்த 91வது முறையாக மோதுகின்றன. 8ஆம் திகதியும் இப்பாடசாலைகளும் மீளவும் மோதுகின்றன.




