காரைதீவு பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தலுக்கு சிபார்சு செய்யப்பட்டிருந்தும் தரமுயர்த்தப்படாதது ஏன்? என பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
இத்தோடு தரமுயர்த்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நான்கு வைத்தியசாலைகள் அண்மையில் சுகாதார அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் காரைதீவுக்கு மட்டும்இந்தப்பாகுபாடு ஏன்மேற்கொள்ளப்பட்டுள்ளது? இதற்கு காரணம் என்ன என்று மக்கள்கேள்வியெழுப்புகின்றனர்.
இலங்கையில் சுகாதாரபராமரிப்பை சமத்துவமாக வழங்குவதை கருத்திற்கொண்டு நான்கு வைத்தியசாலைகள் சுகாதாரஅமைச்சின் திட்டமதிப்பீட்டுக்குழுவின் தீர்மானத்திற்கமைவாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க இத்ரமுயர்தல் தொடர்பான சுற்றுநிருபத்தை மாகாண பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர்கள் மற்றும் குறித்த தரமு;ர்த்தப்பட்ட நான்கு வைத்தியசாலைகளின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பிவைத்துள்ளார்.
'பி' தரத்திலிருந்த சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை 'ஏ' தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
பிரதேச வைத்தியசாலை 'சி' தரத்திலிருந்த மினுவாங்கொடை மற்றும் வேலணை வைத்தியசாலைகள் 'பி' தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளன.
ஆரம்ப மருத்து பராமரிப்பு நிலையமாகவிருந்த வான்எல வைத்தியசாலை 'சி' தர பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
குறித்தவைத்தியசாலைகளுக்கான வசதிகள் வெகுவிரைவில் அமைச்சின் பிரமாணங்களுக்கமைவாக வழங்கிவைக்கப்படவிருக்கின்றன.
இதேவேளை ':சி' தரத்திலுள்ள காரைதீவு பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்த சிபார்சுசெய்யப்பட்டபோதிலும் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
