சேருவில மூதூர் பிரதான வீதியில் டிப்பர் வாகனமொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்து


எப்.முபாரக்-
சேருவில மூதூர் பிரதான வீதியில் டிப்பர் வாகனமொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(16) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோர் கந்தளாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாயில் இருந்து சேருநுவர பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டியும், மணல் ஏற்றுவதற்காக சென்ற டிப்பர் வாகனமுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதியை பொலிஸார் தடுத்து வைத்துள்ளதோடு விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -