நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கிருமிகளை அழிக்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள், வீட்டு நுழைவாயில்கள் உட்பட பல இடங்களுக்கு கிருமிகளை அழிக்கும் வேலைத்திட்டம் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அவர்களின் தலைமையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் உதவியுடன் நடைபெற்ற இவ் வேலைத்திட்டத்தில் உப தவிசாளர் யூ.எல்.அஹமட், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனப்பலரும் இவ் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டனர்.