நிதானம் இழக்கும் விஜேதாச ராஜபக்ச


ஹஸ்பர் ஏ ஹலீம்-
ஸ்டர் தாக்குதளுக்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த விஜேதாச ராஜபக்ச அவர்கள் இலங்கை முஸ்லிம்கள் குறித்தும், ஜம்மிய்யதுல் உலமா குறித்தும் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானதும் கண்டனத்துக்குரியதும் ஆகும். என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (02)இது குறித்த ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது
ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளித்த விஜேதாச ராஜபக்ச, அவர்கள் ஹலால் சான்றிதழ் வழங்குதல், பெண்கள் முகத்தை மூடுதல், ஷரிய்யா சட்டத்தை கற்பித்தல், அரபு மொழியை கற்பித்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் இலங்கையை இஸ்லாமிய ராஜ்ஜியமாக மாற்றுவதற்கு ஜம்மியத்துல் உலமா முயற்சி எடுப்பதாக குற்றம் சாட்டினார்.

இப்பணிகள் நான்கும் மக்களை நேர்வழிப் படுத்தும் முஸ்லிம்களின் ஆன்மிகப் பணியே தவிர நாட்டுக்கு எதிரான எந்த சூழ்ச்சிகளும் கொண்டதல்ல.
இன் நாட்டின் பாதுகாப்புக்கும், சட்ட திட்டங்களுக்கும் மதிப்பளித்து வரும் முஸ்லிம்களையும், பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப் பட்ட ஜம்மியத்துல் உலமாவையும் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி, கொச்சைப் படுத்துவதோடு பெரும் பான்மை சமூகத்திடம் இருந்து முஸ்லிம்களை மேலும் அந்நியப் படுத்தும் இவ்வாறான இழி செயலை இனிமேலும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல்கள் நெருங்கும் இத் தருணத்தில் உங்களது அரசியல் வங்குரோத்து நிலைமயை பாதுகாப்பதடற்காக பொய்களை கூறி அப்பாவி சமூகத்தை பலிகொடுக்க முயட்சிக்க வேண்டாம் எனவும் கூறி வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -