ஜனாதிபதியினால் விலைக்குறைப்பு செய்யப்பட்ட மீன்ரின் பருப்பு இன்னும் மக்களைச் சென்றடையவில்லையென புகார்.


காரைதீவு நிருபர் சகா-

நாட்டுநிலைமை கருதி ஜனாதிபதியினால் விலைகுறைப்புச் செய்யப்பட்ட மீன்ரின் பருப்பு போன்றன புதிய விலையில் இன்னும் மக்களைச்சென்றடையவில்லையென புகார் தெரிவிக்கப்படுகிறது.

கல்முனைப்பிராந்தியத்தில் பெரும்பாலான கடைகளில் குறித்த உணவுப்பொருட்கள் பழையவிலையிலேயே விற்கப்பட்டுவருகின்றன.
கடைஉரிமையாளர்களிடம் கேட்டபோது இன்னும் புதிய விலைக்குவிற்கவேண்டிய அப்பொருட்கள் எமக்கு வந்துசேரவில்லை. மேலும் பிரதேச செயலகத்திடமிருந்து அதுபற்றிக்கேட்டக்கப்பட்டது. எமது நிலைமையைகூறினோம். பொருட்களுக்குத் தட்டுப்பாடு இருக்குமாயின் அவற்றைப்பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகக்கூறினார்கள். என்றனர்.
ச.தொ.ச விற்பனைநிலையம் சிலவற்றில் நேற்றுமுன்தினம் வந்த இவ்வுணவுப்பொருட்கள் வந்து ஒருசிலநிமிடங்களுள் தீர்ந்துவிட்டதாகக்கூறப்படுகின்றது.

காரைதீவுக்கான ச.தொ.ச. விற்பனைநிலையம் மூடப்பட்டுள்ளது. முகாமையாளிடம் கேட்டபோது இடம்தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார். மொத்தத்தில் விலைக்குறைப்புக்கான பொருட்கள்இன்னும் மக்களைவ ந்தடையவி;ல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -