இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பின்போது நாட்டிலும் உலகிலும் ஆட்டிப்படைக்கும் கொடிய நோயன கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பாக கலந்துரையாடபபட்டன. அத்துடன் நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் செயல்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர். கோவிட்-19 வைரஸ் நோயை தடுப்பதற்கான நடவடிக்கையானது தேசிய செயல்பாட்டு நிலையத்தின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் செயல்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
விஜயத்தை மேற்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அவர்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான இத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதிப்படுத்தினார். இந்த சந்திப்பின் உரையாடலின் முடிவில், இராணுவ தளபதி அலுவலகத்தில் அதிதிகள் புத்தகத்தில் அவர் தனதுகருத்துக்களை குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குழு கெப்டன் சீன் அன்வின் அவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
