சம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பினால் கோரோனா பாதுகாப்பு அங்கி!

சம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பினால் கோரோனா பாதுகாப்பு அங்கி கோவிட் 19 ஹிட் சம்மாந்துறை வைத்தியசாலை, பொலிஸ் நிலையத்திற்கு கையளிப்பு.

எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறை இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பரமௌன்ட் என்ர பிறைஸஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழில் அதிபாருமான எஸ்.எம்.எம்.பசீலின் அனுசரனையில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களை பாதுகாக்கும் நோக்கில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் பொலிஸ் நிலையத்திற்கு கோரோனா பாதுகாப்பு அங்கி கோவிட்-19 ஹிட் வைத்திய அத்தியட்சகர் அலுவலகத்தில் வைத்து இன்று (30) கையளிக்கப்பட்டது.
அரச சட்டவாதி சட்ட முதுமாணி எம்.ஏ.எம்.லாபீர் தலைமையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கொரேனா வைரஸ் தொற்று இனங்கனப்பட்டவர்களை பரிசோதனை நிலையங்களுக்கு கொண்டு செல்லும் சுகாதார தரப்பினருக்கும் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு கடைமையிலுள்ள உத்தியோகத்தர்களுக்கும் வழங்குவதற்கென 55 கொவிட் 19 ஹிட் இலவசமாக கையளிக்கப்பட்டது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டக்டர் எம்.எச்.எம்.ஆஷாத், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி, கே.டி.எஸ்.ஜயலத், பரமௌன்ட் என்ர பிறைஸஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழில் அதிபாருமான எஸ்.எம்.எம்.பசீல் சுகாதார துறை உத்தியோகத்தர்கள், அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -