திருவள்ளுவர்குருபூஜைதினவிழாவில் தவிசாளர் ஜெயசிறில் உரை
காரைதீவு நிருபர் சகா-'இன்றைய உலகமக்கள் துன்பப்படுவதற்கு அடிப்படைக்காரணம் திருக்குறள் போன்ற அரிய நல்ல நூல்களைப் படிக்காமையும் அதன்படி நடக்காமையுமே என அடித்துக்கூறலாம்.'
இவ்வாறு திருவள்ளுவர் குருபூஜைதினநிகழ்வில் உரையாற்றிய காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
உலகப்பொதுமறையாம் திருக்குறள் எனும் அரும்பெரும்பொக்கிசத்தை இப்பூவுலகிற்கு அளித்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமானின் குருபூஜை தினம்(10.03.2020) செவ்வாய்க்கிழமை (10) அனுஸ்ட்டிக்கப்பட்டது.
காரைதீவு பிரதேசசபைமுன்றலில் அண்மையில் நிறுவப்பட்ட திருவள்ளுவர்சிலைக்கு (10) மலர்மாலை அணிவித்து புஸ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
அந்தவளாகத்தில் சபையின்செயலாளர் அ.சுந்தரகுமார் வரவேற்பில் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது.
பிரதேசசபை உறுப்பினர்களான திருமதி சி.ஜெயராணி இ.மோகன் சபா.நேசராசா ஆ.பூபாலரெத்தினம் ஆலேசனைஉறுப்பினர் சி.தங்கவேல் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
விக்னேஸ்வரா வித்தியாலயமாணவன் எஸ்.கவின் குறளுரையாற்றினார். அனைத்து மாணவர்க்க்கும் சிறப்புமலர் பரிசாக வழங்கப்பட்டது.
அங்கு தவிசாளர்ஜெயசிறில் மேலும் உரையாற்றுகையில்:
எத்தகைய கதையென்றாலும் வள்ளுவன் கூறியதற்கொப்ப மெய்ப்பொருள் கட்டாயம் காணவேண்டும். அதைவிடுத்து கேட்டதையெல்லாம் முகநூலில் எழுதிக்கொண்டிருந்தால் தீர்வுகிடையாது.
மாறக முரண்பாடும் சிக்கலுமேஎஞ்சும்.
கருவறை தொடக்கம் கல்லறைவரை வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் தொடர்பாக அரிய தத்துவங்களை இனமத பிரதேச பேதம்கடந்து முக்காலத்திற்கும் ஏற்றவாறு உருவாக்கப்பட்டது திருக்குறள்.
அப்படிப்பட்ட அரியபொக்கிசத்தை உலகிற்களித்த வள்ளுர்பெருமானின் திருவுருவச்சிலை முத்தமிழ்வித்தகன் சுவாமி விபுலாநந்தஅடிகளார் பிறந்த இந்த தமிழ்மண்ணில் நிறுவப்படுவது சாலவும் பொருத்தமானதே.
இன்றையஇளைஞர்களுக்கு நூல்களை வாசிக்க நேரமில்லை.திருக்குறளை வாசிக்க அவர்கள்முனைகிறார்களில்லை.
எந்நேரமும் ரியுசன் ரியுசன். கணிதம்விஞ்ஞானம் தொழினுட்பம் என்றுஅலைகிறார்கள்.அது தேவைதான் அதேவேளை வாழ்க்கைக்கு வழிகாட்டும் திருக்குறள் போன்ற நல்லபலநூல்களையும் படிக்கவேண்டும்.என்றார்.
உறுப்பினர் இ.மோகன் நன்றியுரையாற்றினார்.


