கட்சியின் தேர்தல் வேட்புமனு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹரீஸ் தொடர்பில் போலியான செய்திகள்..

ஊடகப் பிரிவு -

பாராளுமன்ற தேர்தல் வேட்புமனு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வேட்பு மனு தயாரிப்பிலும் அதன் வேட்பாளர்கள் தெரிவிலும் கட்சி தலைவருக்கு பக்க பலமாக கட்சியின் பிரதித் தலைவர் என்ற வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவரது வீட்டிலிருந்து பணியாற்றி வருகின்றார்.

இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கட்சி நடவடிக்கைகளிலும் தேர்தல் வியூகம் குறித்து செயற்பட்டு வருகையில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கையொப்பமிட்ட நிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கையொப்பமிடாமல் தலைவர் ஹக்கீமுடன் முரண்பட்டு தலைமறைவாகியுள்ளார் என சோடிக்கப்பட்ட செய்தியினை ஒரு குறித்த இணையத்தளம் வெளியிட்டமை ஊடக தர்மத்தை மீறும் செயலாகும் என்பதோடு குறித்த இணையத்தளத்தின் செய்திகளின் உண்மைத்தன்மை கேள்விக் குறியாக பார்க்கப்படும்.

இவ்வாறான போலிச் செய்திகளை கட்டவிழ்த்து விட்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீசுக்கும் தலைவர் ஹக்கீமுக்குமிடையில் முரண்பாடென கட்சிப் போராளிகள், ஆதரவாளர்கள் மத்தியில் காட்ட சிலர் முற்படுகின்றனர். இதில் எவ்வித உண்மையுமில்லை என்பதை தெளிபடுத்துகின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -