அட்டன் பிரதேச தோட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு உணவு தேவையான அத்தியவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் 24/03 விநியோகி க்கப்பட்டன.
கொரோனா தொற்றினையடுத்து நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கினூடாக உணவு தேவைக்கான அத்தியாவசிய பொருட்கள் குடியிருப்பு பிரதேசங்களுக்கு நேரடியாக விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அம்பகமுவ பிரதேச செயலகமும் அட்டன் டிக்கோயா பலநோக்கு கூட்டுறவு சங்கமும் இணைந்து 1200 ரூபாய் பெறுமதியான உணவு தயாரிப்பு பொருட்களை 1000 ரூபாவிற்கு விநியோகம் செய்யப்பட்டது
முதற்கட்டமாக அட்டன் பிரதேசத்தில் மேற்படி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது
இதன்போது , அட்டன் டிக்கோய பலநோக்கு கூட்டுறவு சங்க அதிகாரிகள், கிராம உத்தியோகஸ்த்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
