ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான அறுபது பாடல்கள் அடங்கிய இறுவெட்டு வெளியீட்டு விழா சனிக்கிழமை (7) ஓட்டமாவடி - மீராவோடை அந்நூர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.சல்மான் வகாப் மெட்டமைத்து பாடிய இவ் இறுவெட்டு விழா நிகழ்வு இக்பால் கலை மன்றத்தின் தலைவர் ஏ.எல்.எம். லியாப்தீன் தலைமையில் இடம்பெற்றது.
தரம் 3,4,5 ஆகிய வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்காக வேண்டி பாடநூல் மற்றும் ஆசிரியர் கைநூல் போன்றவற்றில் உள்ளடக்கியுள்ள பாடல்களை மெட்டமைத்து பாடியுள்ளதாக பாடலாசிரியர் எம்.ஐ.சல்மான் வகாப் கூறினார்.
இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளர் எம்.பீ.முஸம்மில், மனித உரிமைகள் தூதுவர்கள் அமைப்பின் பணிப்பாளர் ஏ.எஸ்.அரூஸ், பேராதனைப் பல்கலைக்கழக புள்ளிவிபரவியல் பிரிவு எஸ்.டபள்யூ. சிறீன் சஸ்னா மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
