வாழைச்சேனை பிரதேசத்தில் மின்சார அதிகரித்து வந்தமை காரணமாக வீட்டு மின் பாவனைப் பொருட்கள்; சேதடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வாழைச்சேனை பகுதியில் மின்சாரம் அதிகரித்து வந்ததினால வீட்டில் தொலைக்காட்சி, வானொலி, கணனி, கண்கானிப்பு கெமரா மற்றும் வீட்டு சமையலறை பொருட்கள் உட்பட பல மின்பொருட்கள் சேதமடைந்துள்ளன.
மின்சாரம் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் வாழைச்சேனை மின்சார சபைக்கு பொது மக்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தும் மின்சாரசபை ஊழியர்கள் இதில் கூடிய கவனம் செலுத்தவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மின்சாரம் அதிகரித்து வந்தமை காரணமாக சிலருக்கு மின்சாரம் தாக்கும் ஆபத்து வரும் நிலை ஏற்பட்டு இருந்ததாக பொதுமக்கள் தெரிவிப்பதுடன் இவ்வாறான மின்சார அதிகரிப்பு வராத வண்ணம் வாழைச்சேனை மின்சார சபையினர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
