சிறுபான்மை சமூகம் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து வருகின்ற நேரத்தில் அரசியல் இலாபத்துக்காக இனவாதிகள் நாட்டை மீண்டும் குழப்பமடையத் தொடங்கியுள்ளார்கள்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
சிறுபான்மை சமூகம் ஜனாதிபதி கோத்தபாய மீது அதிகம் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் சில இனவாதிகள் நாட்டை அரசியல் இலாபத்துக்காக குழப்ப முற்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.

கிண்ணியாவில் இன்று (04) இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில் அடிப்படை வாதங்களை தூண்டுவோர் மீது ஜனாதிபதி அவர்களின் வாய் சொற்பிரயோகங்களை அடக்கி வாசிக்க வைக்க வேண்டும்

தற்போது வருகின்ற தேர்தலினை இலக்காக வைத்து அரசியல் இலாபங்களுக்காக மக்களிடையே இன நல்லிணக்கத்தை சீர் குழைக்க முற்படுகின்றனர்.

நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மீது ஆதாரமற்ற குற்றங்களை முன்வைத்து செயற்படுவது எமக்கு கவலையளிக்கிறது சிறுபான்மை இனம் இந்த நாட்டில் ஒதுக்கப்படுவதற்காக விஜேதாச ராஜபக்ச போன்றவர்கள் தங்களின் மீது முஸ்லிம் சமூகத்தின் தனியார் சட்டம்,ஆடை விவகாரம் தொடர்பில் பொய்யான கதைகளை கட்டுகின்றனர்

இனவாத அரசியலால் மக்களை மீண்டும் திசை திருப்ப வைத்து வாக்கு வங்கிகளுக்காக நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல முற்படுகின்றார்கள் .

அண்மையில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் சாட்சியமளிப்பின் பின் இஸ்லாமிய மதத்தை அடிப்படை வாதம் என பல வேறுபட்ட கருத்துக்களை இவ்வாறான சட்ட திண்டங்களை பாதுகாக்கும் உயரிய சபையில் சொல்லியிருப்பது எமக்குள் இன நல்லிணக்கத்தை மழுங்கடிக்கச் செய்கிறது .

இது போன்று உதய கம்மன்பில அதுரலிய ரதன தேரர் போன்றவர்கள் இனவாதத்தை மதவாதத்தை கையில் எடுத்து அரசியல் செய்கிறார்கள் இவ்வாறானவர்களை தற்போதைய ஜனாதிபதி அவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் தமிழ் முஸ்லிம்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் நாட்டினைடைய பொருளாதாரத்தையும் அபிவிருத்திகளையும் அழிவடையச் செய்வதே இனவாதிகளின் இலக்காகும்.

கடந்த கால டி.எஸ்.சேனாநாயக்க ,டட்லி சேனநாயக்க அரசியல் கால கட்டத்தில் முஸ்லிம்கள் நாட்டின் அபிவிருத்திக்காக பாரிய பங்களிப்பு செய்துள்ளார்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் இப்போது மறைக்கப்படுகிறார்கள்

கடந்த கால வரலாறுகள் இதற்கு சாட்சிகளாகும். சந்திரிகா அம்மையார் காலத்தில் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் ஆட்சி அதிகாரத்துக்காக ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளார் இது போன்று பிரேமதாச மஹிந்த கால அரசியலில் இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார்,அஸ்வர் ஹாஜியார் உட்பட பதியுதீன் மஃமூத் போன்ற தலைவர்கள் ஒத்துழைப்பின் மூலமாக அறபு நாடுகளின் உதவிகளுடன் பாரிய பங்களிப்பினை வழங்கிய அரசியல் வரலாறுகளாக உள்ளது.

நாட்டில் இவ்வாறான இன வாதக் கும்பலையும் இனவாத இயக்கங்களாக செயற்படும் ராவன பலய,பொதுபல சேனா,மடு மாதா அரவிந் போன்ற இயக்கங்களை இல்லாமல் ஆக்கி நல்லிணக்க ஆட்சியை மூவின சமூகங்கள் மீதும் இந்த ஜனாதிபதி ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை எமக்குள் இருக்கிறது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -