இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளர் பூரண குணமடைந்தார்!!!(படங்கள்)

லங்கையில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா வைரஸ் நோயாளரான சுற்றுலா வழிகாட்டி முழுவதுமாக குணமடைந்து இன்று (23) காலை வீடு திரும்பியுள்ளதாக IDH வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

அவருக்கு பரிசோதனைகள் பல செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முழுமையாக குணம் அடைந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு குணமடைந்த நபர் இரண்டு நாட்கள் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அவர் வைத்தியசாலையிலிருந்து வௌியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசேட நோயாளர் காவு வண்டியில் அவர் தனது வீட்டை நோக்கி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு வார காலம் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவர் சீனாவின் வுஹான் நகரில் வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்த தினத்திலிருந்து 71 நாட்கள் கழித்து இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது கோரோனா வைரஸ் தொற்றாளர் ஆவார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -