இவர்கள் தமது பிரதேச சுகாதார பரிசோதகர்கள் அல்லது சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவித்து தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இன்று தெரிவித்தார்.
இன்றைய (28) தினம் 4 கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவானதாக தெரிவித்த அவர் இவர்களுடன் சேர்த்து மொத்தமாக கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 110 என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நால்வரின் இருவர் சென்னையிலிருந்து இலங்கை வந்தவர்கள். மேலும் இருவர் கடந்த 4 நாட்களுக்குள்; சென்னையிலிருந்து இலங்கை வந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் இலங்கையர். எனவே சென்னையிலிருந்து கடந்த 14 நாட்களுக்குள் இலங்கைக்கு வந்தவர்கள் இருப்பார்களாயின் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க வலியுறுத்தினார்.
