முழு உலகத்தினையும் அச்சுறுத்தி வரும் கொவிட் 19 கொரானா வைரஸ் கிருமியினை கட்டுப்படுத்த நாடெங்கிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துவருகின்றன. நிலையில் ஹட்டன் டிக்கோயா நகர சபை இதனை கட்டுப்படுத்துவதற்காக பாரிய வேலைத்திட்டம் ஒன்றினை இன்று (23) மூன்று மணியளவில் ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்தில் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலசந்தரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டதனை தொடர்ந்து குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது பஸ் தரிப்பு நிலையம் முழுவதும் தீயணைக்கும் கருவிகள் மூலம் கிருமி நாசினி கலந்த நீரினால் கழுவுப்பட்டன.
இந்த வேலைத்திட்டத்திற்கு ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் தண்ணீர் பவுசரும் பயன்படுத்தப்பட்டதுடன் பொலிஸாரும் இணைந்திருந்தன.
இதன் போது தலைவர் பாலசந்திரன் கருத்து தெரிவிக்கையில் கடந்த சில தினங்களாக ஹட்டன் நகரில் கொரானா வைரஸ் பரவுவதனை கட்டுப்படுத்துவதற்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை தனிமை படுத்தினோம். சகல விடுதிகளை பரிசீலனை செய்து மக்கள் பாதுகாப்பினை உறுதி செய்தோம்.அத்தோடு ஒரு சில விடுதிகளுக்கு சீல் வைத்தோம்.அதனுடன் நின்று விடாது எதிர்வரும் தினங்களில் மக்கள் நடமாடும் அனைத்து இடங்களிலும் மக்களின் பாதுகாப்பு கருதி கிருமி ஒழிப்பு வேலைத்திட்ம் முன்னெடுக்க உள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலசந்திரன் தொடர்ந்தும் தெரிவித்தார்.