தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் திகாமடுல்ல(அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நிறைவுசெய்வதில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளதாகதெரிகிறது.
ரெலோசார்பில் கடந்த 2015 தேர்தலில் போட்டியிட்டுஅம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கவீந்திரன் கோடீஸ்வரன் இம்முறைஇறுதிநேரத்தில் அக்கட்சியைவிட்டு விலகி இலங்கை தமிழரசுக்கட்சியில் போட்டியிட அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்தே இச்சிக்கல்நிலைதோன்றியுள்ளது.
இது தொடர்பாக ரெலோ அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தனது கடுமையான கண்டனத்தைத்தெரிவித்ததுடன் தமது கட்சிக்கு துரோகமிழைத்த அவர் த.அ.கட்சியில் அவருக்கு ஆசனம் வழங்கக்கூடாது என்றும் வவுனியாவில்வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
கோடீஸ்வரன் எமது கட்சியில் தொடர்ந்துஇருக்கமுடியாது அதேவேளை தமிழரசுக்கட்சியும் த.தே.கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி என்றரீதியில் கோடீஸ்வரனுக்கு ஆசனம் வழங்குவதென்பது ஜனநாயகமீறலாகும்.அப்படிவழங்கமுனைந்தால் அதை நாம் முற்றாக எதிர்ப்போம்.என்றார்.
இதேவேளை ரெலோவின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் கடும் விமர்சனத்துடன்கூடிய கண்டனஅறிக்கையை வெளியிட்டு கோடீஸ்வரன் இம்முறை தோற்பது உறுதி என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை கோடீஸ்வரன் த.அ.கட்சிக்கு தாவியிருப்பது அம்பாறை மாவட்ட த.அ.கட்சி மூத்தஉறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
