இந்தியாவில் சிக்கித்தவிக்கும் கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்களின் கோரிக்கை!!


ந்தியாவின் தமிழ்நாட்டில் கல்வியை தொடரும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,மாணவர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கற்றுவரும் விரிவுரையாளர்கள், மாணவர்களே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தாங்கள் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில் அதனால் தாங்கள் மிகுந்த அச்ச நிலையில் உள்ளதாகவும் விரைவாக தங்களை இலங்கைக்கு அழைத்துச்செல்ல அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடும்பங்களை பிரிந்து தாங்கள் இங்கு கல்வி கற்பதற்காக வருகைதந்ததாகவும் தங்களை எவ்வளவு விரைவாக அழைத்துச்செல்லமுடியுமோ அவ்வளவு விரைவாக அழைத்துச்செல்ல அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் கூட தாங்கள் காசுக்காக வாங்கும் நிலையில் தற்போதைய நிலையில் அவற்றினை பெற்றுக்கொள்வதற்கு தாங்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கிவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -