வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவர்


பாறுக் ஷிஹான்-
டமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவர் கடந்த அவரது ஆட்சிக்காலத்தில் அர்த்த பூர்வமாக எதையும் செய்யவில்லை அதனால் தான் முதலமைச்சர் பதவிக்கு கையாலாகாதவர் என தெரிவித்திருந்ததாக கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை(15) மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தல் தற்சமயம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது அந்த மக்களின் கைகளில் தங்கியுள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் சரியானவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் .வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவர் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன். என குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -