காரைதீவு சகா-
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் 10வேட்பாளர்களதும் வேட்புமனு (18) புதன்கிழமை 11மணியளவில் அம்பாறைக்கச்சேரியில் தாக்கல் செய்யப்பட்டது.
தஅ.கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி கி.துரைராஜசிங்கம் வேட்புமனுவை தெரிவத்தாட்சிஅலுவலரிடம் ஒப்படைத்தார்.
இதன்போது காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் கட்சியின் இளைஞரணி துணைச்செயலாளர் சட்டத்தரணி அ.நிதாஞ்சன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியகட்சி முக்கியஸ்தர்களும் சமுகமளித்திருந்தனர்.
இ.த.அரசுக்கட்சி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேசசபைத்தவிசாளருமான த.கலையரசன் கல்முனையின் பிரபல சமுகசேவையாளரும் மாணவர்மீட்புப்பேரவை தலைவருமான எந்திரி எஸ்.கணேஸ் திருக்கோவிலின் நீண்டகால த.அ.கட்சி செயற்பாட்டாளர் வைத்தியர் த.தமிழ்நேசன் தம்பிலுவில் இளம்ஊடகவியலாளர் இரா.சயனொளிபவான்(சயன்) பொத்துவில் நீண்டகால த.அ.கட்சி செயற்பாட்டாளர் கே.சுந்தரலிங்கம் காரைதீவு பிரதேசசபை த.அ.கட்சி பெண் உறுப்பினர் திருமதி சின்னையா ஜெயராணி பாண்டிருப்பு த.பிரதீபன் அக்கரைப்பற்று எஸ்.ரவிகரன் திருக்கோவில் கே.பரணிதரன் ஆகியோரின் பெயர்கள் வேட்புமனுவில் இடம்பெற்றிருந்தன.
