1990 நோயாளிகாவு வண்டி மோதி இரு முச்சக்கரவண்டிகள் சேதம்.
கொழும்பு ,கம்பகஹ,புததளம்,கண்டி மற்றும் யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இன்று (30) திகதி காலை ஆறு மணிக்கு தளர்த்தப்பட்டன.
இதனை தொடர்ந்து மலையக நகரங்களை நோக்கி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கூடியிருந்தன.
இதனால் சில்லறை கடைகள்,சதோச விற்பனை நிலையம்,மருந்தகங்கள்,மரக்கறி கடைகள்,எண்ணெய் நிரப்பு நிலையங்கள் ஆகியவற்றி பெரும் எண்ணிக்கையிலானோர் கூடி இருந்ததுடன் நீண்ட வரிசையும் காணப்பட்டன.
சுகாதார அறிவுறுத்தல்களை பேணு அடிக்கடி பொலிஸார் வலியுறுத்தியதுடன்.
ஓலி பெருக்கிகள் மூலமும் கொவிட் 19 என்ற வைரஸ் தொடர்பாக அறிவுறத்தல்களை வழங்கின.
எவ்வாறான ஒரு சிலர் சுகாதார பாதுகாப்பு வழி முறைகளை பின் பற்றாது இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை அரசாங்கம் கொவிட் 19 நாட்டில் பரவியதனையடுத்து பொது மக்களுக்கு பயன்படுத்தும் சில பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன.
எனினும் மலையக நகரங்ளில் சத்தோச தவிர்ந்த பெரும்பாலான கடைகளில் அப்பொருட்கள் குறைத்து கொடுக்கவில்லை. முட்டை 15 ரூபாவுக்கும்,பருப்பு தேங்காய்,வெங்காயம் போன்றன 130 இற்கும் மேலான விலைகளுக்கே விற்பதனை காணக்கூடியதாக இருந்தன.
இதே நேரம் மலையக நகரங்களுக்கு வரும் பெரும் பாலானோர் முகக்கவசம் அணிந்து இருந்ததுடன் ஒரு சிலர் ஒரு மீற்றர் இடைவெளியினை பேணியிருந்தனர்.இன்னும் சிலர் முகக்கவசமும் அணியாது ஒரு மீற்றர் இடைவெளியினையும் பேணாது பொருட்களை கொள்வனவு செய்வதனை காணக்கூடியதாக இருந்தன.
இதே வேளை ஹட்டன் டன்பார் பகுதிக்கு அவசர அழைப்பின் காரணமாக நோயாளிவரை வைத்தியசாலைக்கு அனுமதிப்பதற்காக சென்ற 1990 நோயாளர் காவு வண்டி முன்னால் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென நிறுத்தியதனால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து பஸ்தரிப்பு நிலையத்திற்கு சமீபமாக ஹட்டன் டிக்கோயா பிரதான விதியில் இன்று (30) திகதி 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதனால் இரண்டு முச்சக்கவர வண்டிகள் சேதமடைந்துள்ளதுடன் இரு உராய்வு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை சில்லறை கடைகளிலும் முட்டை கடைகளிலும் மக்கள் அதிகமாக கூடியிருந்ததுடன் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாத நிலையிலேயே கூடியிருந்தனர்.
இதனால் மக்களை நெறிப்படுத்துவதற்காக பொலிஸார் கடைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அரசாங்கம் அறிவித்த விலைக்க வர்த்தகர் பொருட்களைவ விற்பனை செய்யவில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
சிறுநீரக நோயாளி ஒருவர் கண்டிக்கு இரத்தம் சுத்திகரிப்பதற்காக பொது போக்குவரத்து இடபெறாததன் காரணமாக 1990 அவசர நோய் காவு வண்டிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அவ்விடத்திற்கு விரைந்த நோய்காவு வண்டி குறித்த நோயாளியினை கிளங்கன் வைத்தியசாலை வரை கொண்டு விடுவதாக தெரிவித்ததனையடுத்து அவர் செய்வதறியாது வீடு நோக்கி சென்றதனை காணக்கூடியதாக இருந்தது.