வாழைச்சேனை பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்




எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் தனது விருப்பத்திற்கு அமைய எவரும் வீதிகளில் நடமாட கூடாது எனவும், நடமாடுபவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்று வாழைச்சேனை பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கி வருகின்றனர்.
வாழைச்சேனை பொலிஸ் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள அனைத்துச் செயற்பாடுகளுக்கும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் அறிவித்தல் விடுத்து வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசாங்கம் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துள்ள நிலையில் சட்டத்தினை மீறி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்திக் கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது அதையும் மீறி சிலர் செயற்படுவதாகவும் குறிப்பாக இளைஞர்கள் கட்டுக்கடங்காமல் மோட்டார் சைக்கிள்களில் தேவையின்றி சுற்றித் திரிவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் திரிபவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி தண்டனை வழங்கப்படும் என்றும், நாட்டு மக்களின் நன்மை கருதி அணைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு வாழைச்சேனை பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.
வாழைச்சேனை பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கி வருகின்ற நிலையில் வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாமல் காணப்படுவதுடன், வீதிகளில் வெறிச்சோடி காணப்படுவதை அவதானிக்கமுடிகின்றது.

குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொலிஸார், இராணுவத்தினர்கள் கடமைகளில் ஈடுபட்டு வருவதுடன், வீதிகளில் ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் இடைக்கிடையே அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாது என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -