எம்.கிருஸ்ணா-
கொரோனா தொற்றிலிருந்து காப்போம்
நோர்வூட் பிரதேசசபையில் அவசர கூட்டம்..
உலகை உழுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோய் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை
அந்த வகையில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் அரசு முன்னெடுக்கின்றது
இந் நிலையில் கொரோனா தொற்று தொடர்பில் அச்சம் அதிகரித்துள்ள நிலையில் நோர்வூட் பிரதேசசபை எல்லைப்பகுதியில் முன்னெடுக்கப்படக்கூடிய சுகாதார பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் விசேட கூட்டம் 23/03 காலை நோர்வூட் பிதேச சபை கூடத்தில் சபைத்தலைவர் ரவி குழந்தைவேலு வின் தலைமையில் இடம்பெற்றது
இதன் போது
நோர்வூட் பிரதேச சபைக்குற்பட்ட 12. வட்டாரங்களிலுள்ள பெருந்தோட்ட பகுதிகளில் ஒலி பெருக்கியினூடாக விழிப்புணர்வு செய்தல் ,கொரோனா தொற்று எவ்வாறு ஏற்படுகின்றது ,கோரோனா தொறௌறிலிருந்து எம்மை நாம் எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம், சுகாதார பழக்கங்கள்,உணவு பழக்கங்கள் , தோட்ட நிர்வாகம்,சிவில் பொலிஸ் பாதுகாப்பு குழு, தோட்ட தலைவர்கள்,இளைஞர் அணியினர்,தோட்ட சுகாதார பிரிவு, மற்றும் நலன்விரும்பிகளை இணைத்துக்கொண்டு தோட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு கிரிமி நாசினி தெளித்தல், பிரதேசசபையினூடாக அச்சிடப்படும் விழிப்புணர்வு சுவரொட்டிகளை தோட்டங்களின் பிரதான சந்திகளில் ஒட்டுதல் போன்ற விடயங்களை முதல் கட்டமாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதுடன்
நகரங்கள் மற்றும் கிராமபகுதிகளுக்கு பிரதேசசபையினூடாக கிருமி நாசினி தெளிக்கவும் விழிப்புணர்வு மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது,
இத் திட்டமானது அந்தந்த வட்டார உறுப்பினர்களின் தலைமையில் முன்னெடுக்க வும் தீர்மானிக்கப்பட்டது
