குமுறுகிறது தேசிய ஆசிரியர் ஜனநாயக சங்கம்.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் பரவலினை தொடர்ந்து அரசாங்கம் பொது மக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாகவும் ஆனால் அதனை அதிகாரிகள் வழங்க மறுப்பதாகவும் விசனம் தெரிவிக்கிறது தேசிய ஆசிரியர் ஜனநாய சங்கம்,
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலசேகரம் கருத்து தெரிவிக்கையில்..
தனது நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக ரசியா செயப்பட்ட விதம் சிறப்பான தாக இருந்தது. அதே போன்று இலங்கை அரசாங்கமும் மிகவும் நுட்பமாகவும் துரிதமாகவும் செயப்பட்டுவருகிறது அதற்காக அரசாங்கத்தையும் ;,பாதுகாப்பு படையினரையும்,சுகாதார உத்தியோகஸத்தர்களையும் நாங்கள் பாராட்டுவதோடு நன்றிகளையும் தெரிவித்தது கொள்கிறோம்,
இந்த வைரஸ் காரணமாக நாட்டினுடைய பொருளாதாரம்,வாழ்வாதாரம் எல்லாமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனை கவனத்தில் கொண்ட அதிமேதகு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அத்திவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தார.; எனினும் குறைக்கப்பட்ட பொருட்கள் சத்தோச மற்று ஒரு சில கடைகளை தவிர ஏனைய எவற்றிலும் இந்த பொருட்கள் குறைத்து கொடுப்பதுமில்லை.பொருட்கள் வாங்குவதற்கும் இல்லை.நிர்னைக்கப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்ய முடியாததன் காரணமாக அதிகவிலை கொடுத்தே பொருட்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
அதே போன்று நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள இக்கட்டனா நிலையினை கருத்தில் கொண்டு பொது மக்களும் அரச ஊழியர்களும் பெற்ற கடனை தற்காலிமாக அறிவிட வேண்டாம் என அறிவித்திருந்தும் அரச நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் தங்களுக்கு சுற்றுநிரூபம் வரும் வரை நாங்கள் கடனை அறிவிடுவோம். என தெரிவிப்பதாகவும் இது குறித்து கவலையடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதே நேரம் அரசாங்கம் முன்னெடுத்துள்ள கொவிட் 19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்கு தங்களடைய சங்கமும் தோல் கொடுக்க தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
