ஹரி தம்பதியின் பாதுகாப்பு செலவை அவர்களே ஏற்க வேண்டும் - அமெரிக்க ஜனாதிபதி




ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
மெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்துள்ள ஹரி மற்றும் மேகன் தம்பதி, தங்கள் பாதுகாப்புக்கான செலவை அவர்களே செலுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹரி தம்பதி கனடாவில் நிரந்தரமான குடியேறியதாக கூறப்பட்டு வந்த நிலையில், அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்து ராணி மற்றும் அரச குடும்பத்துக்கு தான் சிறந்த நண்பன், அபிமானி என்று குறிப்பிட்டு டுவிட்டரில் டுவீட் செய்துள்ள அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட ட்ரம்ப், அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய ஹரி தம்பதியின் பாதுகாப்புக்கான செலவை அமெரிக்கா அரசாங்கம் ஏற்காதென்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க அரசாங்கத்திடம் உதவி கோரும் எண்ணம் இல்லை என இதற்கு ஹரி தம்பதியின் செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -