தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் வரை வேட்பாளர்களுக்கான விருப்பு எண் வழங்கப்பட மாட்டாது

2020 பொதுத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் நாடுமுழுவதும் கொரோனா அச்சம் நிலவுவதால் பொதுத்தேர்தலை அன்றைய தினம் நடாத்த முடியாது என்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1981 ஆம் இலக்க பொதுத் தேர்தல் சட்டத்தின் 24-3 சரத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரத்துக்கு அமைய இந்த விசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் வரை வேட்பாளர்களுக்கான விருப்பு எண் வழங்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -