மத்தியமுகாமில் கொரோனா?


மத்தியமுகமில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனதாக சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்டவருக்கு:பரிசோதனையில் தொற்று ஏற்படவில்லை
எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கத்தார் நாட்டில் தொழில் பணிபுரிந்து இலங்கைக்கு வருகை தந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனதாக சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்டு நேற்று (18) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டார்.

இதுதொடர்பில் பரிசோதனை மேற்கொண்ட வைத்திய அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்று எதுவும் இந்த நபரிற்கு ஏற்படவில்லை என உறுதிப்படுத்தியதாக நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதன் தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், பொலிஸாரும், இரானுவமும் இணைந்து வெளிநாட்டிலிருந்து வருகை தருவர்கள் மேற்பார்வை செய்து கொரோனா வைரஸ் தொடர்பாக அறிகுறிகள் தென்பட்டால் அந்நபர்களை விஷேட பரிசோதனை உட்படுத்தி வருகின்றனர்.

இதன்போது தொழில் நிமிர்த்தம் கத்தார் நாட்டிலிருந்து வருகைதந்த மத்தியமுகாம்-03 பிரிவை சேர்ந்த நபர் ஒருவருக்கு நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளாக இருமல், தொண்டை நோ, மூச்செடுப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டதினால் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அவசர அம்புலன்ஸ் சேவை ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட போதே நோய் தொற்று இல்லை என்பது மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் வைத்தியர் வைதேஹி ஆர் பிரான்சிஸ்(Honorary Consultant Microbiolologist) என்பவரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் எவரும் அச்சமடைய தேவையில்ல எனவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவு பூரணமான கண்ணப்பிலுள்ளதாகவும் இப்பிரதேசத்தில் வெளிநாடு மற்றும் மாவட்டத்திற்கு வெளியிலிருந்து தங்களது சொந்த இடங்களுக்கு வருகை தரும் பொது மக்கள் தொடர்பில் அவதானத்துடன் செற்படுமாறும் இதுதொடர்பில் கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டாலோ உடனடியக நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தொலைபேசி இலக்கத்திற்கு (067-2226091) அறியத்தருமாறு கோட்டுக்கொள்ளப்படுகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -