தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீர் வெட்டு அமுல்படுத்துவதனால் கல்குடா பகுதியிலுள்ள குடிநீர் பாவனையாளர்கள் மிகவும் அசெளகரியத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக கல்குடா தொகுதி வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்படும் நீர் விநியோகம் இவ்வாறு முன்னறிவிப்பு இன்றி நீர் வெட்டு இடம்பெற்று வருகிறது.
இதன் காரணமாக பாவனையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து நீர் வெட்டும் நேரங்களை முன்கூட்டியே அறிவிப்பதன் மூலம் பாவனையாளர்கள் அசெளகரியங்களிலிருந்து தவிர்ந்து கொள்ள முடியும் என்று குடிநீர் பாவனையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
