அம்பாறை சடயந்தலாவ கல்முனை பி தர வீதி குன்றும் குழியுமாக காணப்படுகிறது- மக்கள் விசனம்


பாறுக் ஷிஹான்-
ம்பாறை சடயந்தலாவ கல்முனை பி தர வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை சடயந்தலாவ ஊடாக கல்முனை செல்லும் குறித்த வீதி செப்பனிடப்படாமல் இருப்பதனால் மக்கள் பல துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.இவ்வீதி சேதமடைந்து காணப்படுவதால் மழை காலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதுடன் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் வீதியில் நடந்து செல்வதில் கடும் அசௌகரியங்களுக்கு உட்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வீதியின் ஒரு பகுதி பகுதி அளவில் உடைந்து காணப்படுகின்றது.அத்துடன் எஞ்சிய பகுதி புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து செய்வது மிகவும் கடினமாக உள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.அத்தோடு இவ்வீதி 800மீற்றர் தூரம் சேதமடைந்து காணப்படுவதாகவும் இந்த குன்றும் குழியுமான வீதியினூடாகவே செல்ல வேண்டியுள்ளதாகவும் அதனால் நோயாளிகள் உட்பட கர்ப்பிணி தாய்மார்கள் பாடசாலை மாணவர்கள் வாகன சாரதிகள் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
உஹன பிரதேச சபைக்குட்பட்ட இவ்வீதியை விரைவில் புனரமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.கடந்த காலங்களில் இந்த வீதி அவசர அவசரமாக புனரமைப்பு செய்யப்பட்ட போதிலும் தற்போது போக்குவரத்து செய்ய முடியாத வகையில் சிதைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -