கொரோனா அச்சம்!!! வெறிச்சோடியது!! பாடசாலைகள்!

எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டக்களப்பு, ஜெயந்தியாயவில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு சிகிச்சைப் பிரிவு இன்று ஆரம்பிக்கப்படவுள்ள தகவல்களை தொடர்ந்து குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் அச்சத்தின் காரணமாக சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயம், ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயம் மற்றும் புணானை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் அச்சம் காரணமாக மாணவர்கள் வரவின்றி பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

குறித்த பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்று தொடர்பான சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்காத போதும் ஆசிரியர்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -