இன்றைய தினம் மேலும் 6 நோய்த் தொற்றுக்கு உள்ளானர்வர்கள் கண்டறியப்பிட்டிருப்பதாகவும் அமைச்சர் இன்று மாலை கூறினார்.
நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளியான சுற்றுலா வழிகாட்டியின் மனைவிக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டடிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜகாசிங்க தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ஜேர்மனியில் சுற்றுலாப்பயணத்தில் ஈடுபட்டிருந்த பின்னர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இந்த நாட்டில் அடையாளம் காணப்பட்ட நபரின் உறவினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை பிரிட்டனில் இருந்து வருகை தந்த நபர், கட்டாரில் இருந்து வருகை தந்த உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரும், களனி மற்றும் மாரவெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளர்களை கொழும்பு IDH அங்கொடை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் சிரமத்தை தவிப்பதற்காக பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் உள்ள வைத்தியசாயை அதற்காக பயன்படுத்துவதற்கு தற்பொழுது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பணிப்பாளர் நாயகம் கூறினார்.
இந்த வைத்தியசாலைக்கு தேவையான வசதிகளைச் செய்துகொடுப்பதற்கு தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவம் இதனை நவீனமயப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இங்கு ஆளணி பற்றாக்குறை நிலவுகின்றது.
இதற்கு தேவையான வைத்தியர்களையும், ஊழியர்களையும் வெளி மாவட்டங்களில் இருந்து அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய COVID -19 தொற்றை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டு மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
