அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் விசேட ஆலோசனைக்கு அமைய தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி உதவிபெறும் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தின் கீழ் 10000.00 ருபா வழங்கும் நிகழ்வு (26.03.2020) கல்முனை பெரியநீலாவணை வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்றது.
நற்பட்டிமுனை–மருதமுனை சமூர்த்தி வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.முபீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேசசெயலாளர் எம்.எம்.நஸீர்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.எ.நஜீம் உள்ளிட்ட குழுவினர் பயனாளிகளின் வீடகளுக்கு சென்று காசோலைகளை வழங்கிவைத்தனர்.
கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 29 கிராமசேவையாளர் பிரிவுகளிலும் உள்ள சமூர்த்தி பயனாளிகளுக்கு 25 மில்லியன் ரூபா நிதி பகிர்தளிக்கப்படவுள்ளது என பிரதேசசெயலாளர் இங்கு தெரிவித்தார்.