நுவரெலியா மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனு தாக்கல்


க.கிஷாந்தன்-
திர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது.

இதில் லிபரல் கட்சியின் வேட்புமனுவும், இரண்டு சுயேச்சை குழுக்களான பெரியன்னண் கணபதி ரவிச்சந்திரன் மற்றும் அப்துல் மனான் ஆகியோர் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனுக்களுமே நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை முறையாக வேட்பு மனு பூர்த்தி செய்யப்படாமையின் காரமாகவே நிராகரிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

1.ஜக்கிய தேசிய கட்சி

2.ஜக்கிய மக்கள் சக்தி

3.ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி

4.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

5.தேசிய மக்கள் சக்தி (மக்கள் விடுதலை முன்னணி)

6.ஸ்ரீ லங்கா சமாஜவாதி கட்சி

7.ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சி

8.சோசலிஸ்ட் சமத்துவ கட்சி

9.ஜனசெத்த பெரமுன

10.புதிய ஜனநாயக முன்னணி

11.லிபரல் கட்சி

12.அபே ஜனபலய

13.பெரட்டுகாமி சமாஜவாதி

ஆகிய 13 அரசியல் கட்சிகளும், 15 சுயேட்சை குழுக்களும் தமது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளன.

(19.03.2020) அன்று ஜக்கிய மக்கள் சக்தி சார்பாக குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், ஆகியோரும் ஜக்கிய தேசிய கடசியின் சார்பாக குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திசாநாயக்கவும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பாக அக்குழுவின் தலைவர் ரொசான் குணவர்தனவும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இம்முறை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் அமைச்சர் ஆறுமுகண் தொண்டமான் தலைமையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சீ.பி.ரட்ணாயக்க, எஸ்.பி.திசாநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பையா சதாசிவம் முன்னாள் மாகாண அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பழனி சக்திவேல், கணபதி கணகராஜ், அருளானந்தம் பிலிப்குமார், புதியவர்களான முத்தையா பிரபாகரன், பி.பிரதீப் மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதே போல ஜக்கிய மக்கள் சக்தி சார்பாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் முன்னாள் அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான மயில்வாகனம் உதயகுமார், இரவீந்திரன், வேலாயுதம் தினேஸ், அசோக ஹேரத், ஜயலத் திசாநாயக்க, இரண்யா ஹேரத், கபில, சங்கர், லங்கா கீகனகே தினேஸ் கிரிசாந்த ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பாக அதன் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ரொசான் குணவர்தன தலைமையில் 11 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -