2020ம் ஆண்டின் February 19ம் திகதிக்கும் February 26ம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு வார காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரச காப்பீட்டு பத்திரங்களில் முதலீடு செய்திருந்த 1,142 கோடி 40 லட்சம் ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி 2020ம் ஆண்டு February மாதம் 19ம் திகதி வரை அரச காப்பீட்டு பத்திரங்களில் 10 ஆயிரத்து 266 கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை வெளிநாட்டினர் முதலீடு செய்திருந்தனர்.
அந்த தொகையானது பெப்ரவரி மாதம் 26ம் திகதி 9,124 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதன் அடிப்படையில் ஒரு வார காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 1142 கோடியே 40 லட்சம் ரூபாவை திரும்ப பெற்றுள்ளனர்.