அம்பாறையில் த.தே.கூட்டமைப்பின் 10 வேட்பாளர்கள் த.தே.கூட்டமைப்பு செயலர் முன்னிலையில் ஒப்பமிட்டனர்.



காரைதீவு நிருபர் சகா-
திர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் 10வேட்பாளர்களும் நேற்று (17) செவ்வாய்க்கிழமை இரவு சுபவேளையான 7.10மணியளவில் ஒப்பமிட்டனர்.

த.தே.கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட தலைமையகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி கி.துரைராஜசிங்கம் முன்னிலையில் ஒப்பமிட்டனர்.

இதன்போது; காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் கட்சியின் இளைஞரணி துணைச்செயலாளர் சட்டத்தரணி அ.நிதாஞ்சன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகிய கட்சி முக்கியஸ்தர்களும் சமுகமளித்திருந்தனர்.

இ.த.அரசுக்கட்சி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேசசபைத்தவிசாளருமான த.கலையரசன் கல்முனையின் பிரபல சமுகசேவையாளரும் மாணவர்மீட்புப்பேரவை தலைவருமான எந்திரி க.கணேஸ் திருக்கோவிலின் நீண்டகால த.அ.கட்சி செயற்பாட்டாளர் வைத்தியர் த.அருள்நேசன் தம்பிலுவில் இளம்ஊடகவியலாளர் இரா.சயனொளிபவான்(சயன்) பொத்துவில் நீண்டகால த.அ.கட்சி செயற்பாட்டாளர் கே.சுந்தரலிங்கம் காரைதீவு பிரதேசசபை த.அ.கட்சி பெண் உறுப்பினர் திருமதி சின்னையா ஜெயராணி ஆகியோர் ஒப்பமிட்டுள்ளனர்.

ரெலோ சார்பில் பாண்டிருப்பு த.பிரதீபன் அக்கரைப்பற்று எஸ்.ரவிகரன் திருக்கோவில் கே.பரணிதரன் ஆகியோர் ஒப்பமிட்டுள்ளனர்.

வேட்புமனுப்பத்திரம் (18) புதன்கிழமை சுபநேரத்தில் அம்பாறைக்கச்சேரியில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது என கட்சிமுக்கியஸ்தர் கே.ஜெயசிறில் தலைமையகத்திலிருந்து தெரிவித்தார்.
இந்தநிலையில் த.தே.கூட்டமைப்பு தனது வேட்பாளர் பட்டியலைத்தயாரித்து முடிந்துள்ளது..கடந்தவாரம் த.அ.கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா செயலாளர் கி.துரைராஜசிங்கம் உள்ளிட்டமுக்கியஸ்தர்கள் காரைதீவுக்கு வந்து அம்பாறை மாவட்ட பெயர்குறித்த வேட்பாளர்கள் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்துச்சென்றமை தெரிந்ததே.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -