100 வயது முதியவரை திருமணம் செய்த 20 வயது இளம் பெண்?


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
ந்தோனேஷியாவில் 100 வயதை மதிக்கத்தக்க முதியவர் 20 வயதிற்கு மேல் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தோனேஷியாவில் அதிக வயது வித்தியாசமின்றி திருமணம் செய்துகொள்வது சர்வ சாதரணமாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் கூட, 71 வயது நபரை 16 வயது பெண் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது 100 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், 20 வயதிற்கு மேல் இருக்கும் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினரான Ayu Anggreni Muchtar என்பவர் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்:-
திருமணம் செய்யும் நபரின் பெயர் Katte எனவும் அவருடைய சரியான வயது தெரியவில்லை.
இருப்பினும் அவர் நூறு வயதை அடைந்திருப்பார் என்று நம்புகிறேன். அதே போன்று அவர் திருமணம் செய்துள்ள Indo Alangக்கு 20 வயதிற்கு மேல் இருக்கும் எனவும் இருவருக்கும் 80 வயது வித்தியாசம் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இவர்கள் இருவரின் திருமணம் மணமகளின் வீட்டில்தான் நடைபெற்றது.
இந்தோனேஷியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 16, ஆனால் அங்கு திருமண சட்டத்தில் இருக்கும் சில ஓட்டைகளை வைத்து ஆண்கள் இளம் பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -