கடந்த அரசாங்த்தின் சம்பள உயர்வு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது.அமைச்சர் தொண்டமான் தெரிவிப்பு.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம் -
தோட்டத்தொழிலாளர் அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது வீடு அல்ல ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு என்ன ஆகும.; என்று, நிச்சமாக மார்ச்ச 01திகதி முதல் உங்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கும் கடந்த காலங்களில் 140 என்றவுடன் ஓடிப்போய் வாக்களித்தீர்கள். என்ன ஆச்சு? அது ஐம்பதாகி கடையில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விட்டதாக தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மானிக்கப்படவுள்ள தோட்டத்தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் வீடுகள் இல்லாத தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு வீடமைப்பதற்காக சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமையில் 100 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (23 )கொட்டியாகல தோட்டத்தில் பொகவந்தலாவை பிரிவில் இடம்பெற்றன.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த வீடுகள் ஏழு பேச்சஸ் காணியில் ஒரு வரவேற்பறை, இரண்டு படுக்கை அறைகள்,சமயலறை,குளியலறை,மலசலகூட வசதிகளுடன் ,மின்சாரம்,போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளுடன் சுமார் 750 சதுர அடிப்பரப்பில் அங்க சம்பூரணமான சுமார் 10 லட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்....
உங்களுக்கு தெரியும் இந்த அரசாங்கம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களதும்,மஹிந்த ராஜபக்ஸ அவர்களதும் அரசாங்கம் அது சொல்வதை தான் செய்யும் செய்வதை தான் சொல்லலும்,கடந்த காலங்களைப் போல் உங்களை ஒரு போதும் ஏமாற்றாது. எமது மக்களுக்கு என்னென்ன தேவை


அதனை நாங்கள் பெற்றுக்கொடுப்போம்.நான் ஒரு போதும் கட்சி பார்த்து வேலை செய்ய மாட்டேன் இங்கு மொத்தம் 212 குடும்பங்கள் தான் இருக்கின்றன. முதற் கட்டமாக 100 வீடுகளும் இரண்டாம் கட்டமாக 112 வீடுகளும் கட்டிக்கொடுக்கவுள்ளேன்.அதே நேரம் தோட்டத்தில் தோட்டத்தொழிலாளர்கள் தவிர ஏனையவர்களும் வாழ்கிறார்கள.; ஆசிரியர்கள்,இருக்கிறார்கள் ஆட்டோ சாரதிகள் இருக்கிறார்கள்,தோட்ட உத்தியோகஸ்த்தர்கள் இருக்கிறார்கள்,யார் எல்லாம் தோட்டத்தில் பிறந்து தோட்;டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அனவருக்கும் வீடுகள் நிச்சயம் உண்டு.
கடந்த மாதம் நான் யாழ்பாணம் போய் இருந்த போது அங்கு பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்களை சந்தித்தேன.; அப்போது அவர்கள் போக்குவரத்து நிறைய பணம் செலவிட வேண்டியிருப்பதாகவும், போக்குவரத்துக்கு சிரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்கள். நான் உடனே அவர்களுக்கு தேவையான 100 துவிச்சக்கவண்டிகளை நேற்று (22) பெற்றுக்கொடுத்துள்ளேன். அது மாத்திரமன்றி அங்குள்ள பிரதேச செயலாளரிடம் காணி ஒன்றினை பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுள்ளேன். அது கிடைத்தவுடன் கொழும்பிலுள்ள இந்தி வம்சவளி பேரவையின் உதவியுடன் ஒரு கட்டம் அமைத்து கொடுத்து அதனை மாணவர்கள் தங்குவதற்காக பயன்படுத்த உள்ளேன். என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பெருந்தோட்டத்துறை ,முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன்,,டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் அருளசாமி பரத் , முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர், கணபதி கணகராஜ்,, இளைஞர் அணித்தலைவர் ஜீவன் தொண்டமான் முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர்.அனுசா சிவராஜா,நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ஏ.குழ்தைவேலு உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் முக்கியஸத்தர்கள் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -