முகநூல் வழியாக சாய்ந்தமருத்துக்கு பிரதேச சபை கொடுத்ததை பற்றி சில நண்பர்கள் விமர்சனம் செய்கின்றனர் அதை விமர்சிப்பதை விட்டு விட்டு மிக நீண்டகாலமாக சாய்ந்தமருத்துக்கு இருந்த பிரச்சினை முடிவடைந்து இருக்கின்றன
இதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு முதல் கணம் நன்றியை தெரிவித்தவனாக கல்முனையில் இருக்கின்ற பிரச்சினையை சாய்ந்தமருது மக்கள் எல்லோரும் ஒத்துழைத்து அதற்குரிய தீர்வை பெறவேண்டுமே ஒழிய இன்னும் இன்னும் நமக்குள் விவாதம் செய்து பிரச்சனைகளை கூட்டிக் கொள்ள வேண்டாம் என்பதை மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் இந்த நகரசபை விடயம் சாய்ந்தமருது மக்களின் மிக நீண்ட நாள் தாகமாக இருந்து தற்பொழுது நிறைவேறியுள்ளது உங்களுடைய மாநகர சபையில் இருந்தவர்கள் செய்த அநியாயத்தின் பின் விளைவின் காரணமாகவே இந்த கோஷம் எழுப்பப்பட்டது ஆகையினால் தான் சாய்ந்தமருது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்பட்டது அதையிட்டு சந்தோசப்பட்டு விட்டு எமது கல்முனையை பாதுகாக்க வேண்டும் என்ற நடவடிக்கையில் நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்
நான் நேரடியாக கடந்த மாநகர சபை தேர்தலில் சாய்ந்தமருதில் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையிலும் அதன் வேதனை நன்கு தெரிந்தவனென்ற அடிப்படையிலும் இந்த அறிக்கையை விடுகின்றேன்.நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவராக இருந்தாலும் அந்தக் கட்சிக்குள்ளே உயர்பீடத்திலும் கட்சித்தலைமையிடமும் மிகவும் கூடுதலான தடவைகள் சாய்ந்தமருத்துக்கான நகரசபை விடயத்தை எத்திவைத்து இதனை கொடுத்து விடுவோம் என்ற கோரிக்கையை முன்வைத்தோம் ஆனால் அவருக்கு ஏற்பட்ட ஒரு சில தடைகளினால் அவராலும் அந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை அதையிட்டு நாங்களும் வருந்துகின்றோம்
ஆனால் எல்லாம் வல்ல இறைவனின் கிருபையினால் எமக்கு நகரசபை விடயம் தற்பொழுது கைகூடியுள்ளது அத்தோடு நீங்கள் விமர்சிப்பதை விட்டுவிட்டு கல்முனையில் இருக்கின்ற மீதிப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பிரதேச வாதங்களையும் கட்சி வாதங்களையும் மறந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென்று மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதோடு சாய்ந்தமருது மக்களின் சந்தோச கொண்டாட்டத்தில் நீங்களும் ஒன்று சேர்ந்து கலந்து கொண்டு எங்களால் ஆகிய உதவியை கல்முனை பிரச்சினையை முடிப்பதற்கான வேலையை
நாங்கள் நிச்சயமாக உங்களோடு கை கோர்த்து செயற்படுவோம் என்பதையும் உங்களது மனம்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு மிகவும் மனம் வருகின்றோம் என்று கேட்டுக்கொள்கிறேன்
என்றும் அன்புடன்
எ.சி.எஹியாகான்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
உயர்பீட உறுப்பினர்
அம்பாறை மாவட்ட பொருளாளர்
சாய்ந்தமருது