அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் சேவைகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸூக்கு மாத்திரம் எதையும் செய்பவர் அல்ல

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம் -
தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமகன் தொண்டமான் அவர்களின் ஒரே நோக்கம் மலையக மக்களுக்காக பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதே,கடந்த வாரம் கூட மலையகத்தில் 10000 வீடுகள் கட்டும் திட்டத்தினை ஆரம்பிக்கும் முகமாக ஹட்டன் வெலிஓhயா பகுதியில் 50 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.நாளை பொகவந்தலாவை பகுதியில் 50 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்படவுள்ளன.கடந்த காலங்களில் இருந்த அமைச்சர்கள் கட்சி பார்த்தும் தொழிற்சங்கம் பார்த்துமே அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டார்கள். ஆனால் கௌரவ அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸிக்காக மாத்திரம் எதையும் செய்பவர் அல்ல அவர் எப்போதும் பொது மக்களுக்கு சேவை சென்றடையும் வகையில் திட்டங்களை முன்னெடுக்குமாறு எம்மிடம் கேட்டுக்கொண்டுள்ளார.; முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமகன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நிவ்வெளி பங்களாவத்த தோட்டத்திற்கு செல்லும் வீதியினை புனரமப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மாலை (22) மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில் ...
கடந்த அரசாங்கத்தில் பல அமைச்சர்கள் இருந்தார்கள் அவர்கள் செய்த ஒரு சில காரியங்கள் கூட அவர்களின் கட்சியினை மையப்படுத்தி தான் செய்தார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவ்வாறனவர் அல்ல அவர் சமூத்தின் மீது அக்கறை கொண்டவர் எனவே அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் கட்சி பாராமல் செய்ய வேண்டும் என்று வழியுறுத்தி வருகிறார்.அதே நேர் ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் நுவரெலியாவில் கூறியது போல் ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுப்பதி;ல் மும்முறமாக செயப்பட்டு வருகிறார் இந்நிலை கடந்த நாலரை வருடங்களாக எல்லா சலுகைகளையும் அனுபவித்து விட்டு தோட்டத்தொழிலாளர்களுக்கு 50 ரூபா கூட பெற்றுக்கொடுக்க முடியாத அமைச்சர்கள் இன்று; ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது.
இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன் வைத்த காலை பின் வைப்பது கிடையாது மார்ச் மாதம் முதலாம் திகதி தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் கிடைப்பது உறுதி என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் லிகாந்தன் ,இ.தொ.காவின் மாவட்டத் தலைவர்கள் உட்பட முக்கியஸத்தர்கள் கலந்து கொண்டனர்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -