“எங்கள் குடும்பம் எங்கள் வீடு” 50 தனி வீடுகளை கட்டி அமைக்க அடிக்கல் நாட்டும் வைபவம்

க.கிஷாந்தன்-
பொகவந்தலாவ கீழ்பிரிவு தோட்டத்தில் 50 தனி வீடுகளை கட்டி அமைக்க 23.02.2020 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் “மலையக எழுச்சி” செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலின் கீழ் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் நெறிப்படுத்தலில் “எங்கள் குடும்பம் எங்கள் வீடு” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமை தாங்கி அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன்போது இவ் நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், உறுப்பினர் கணபதி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், இ.தொ.கா பொது செயலாளர் அனுஷா சிவராஜா, இ.தொ.கா இளைஞரணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இதன்போது அமைச்சர் மாலையிட்டு வரவேற்கப்படுவதையும், அதிதிகள் அடிக்கல் நாட்டி வைப்பதையும் இங்கு படங்களில் காணலாம்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -