முஸ்லிம்களின் ஏககுரலாக அகில இலங்கை மக்கள் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை ! அ.இ.மு.கா. அமைப்பாளர் .ஏ.கே.அமீர்.


எம்.எம்.நிலாம்டீன்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பது பஞ்சு மெத்தையில் வளர்ந்த கட்சி அல்ல. கரடுமுரடான பள்ளம் படுகுழி நிறைந்த பாதை கொண்ட வெறும் பாலை வனத்தில் உருவாக்கியது இந்தக் கட்சி . அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பது அதன் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரிசாத் பதியுத்தீன் அவர்களின் அயராத முயற்சியின் பயனாக எதிர்நீச்சல் போட்டு நயவஞ்சகத்தை முறியடித்து முதுகில் குத்துவதை தாங்கிக் கொண்டு தலைவரின் முயற்சிகளுக்கும் சேவைகளுக்கும் குறுக்கே நின்று தடை போட்ட சக்திகளையெல்லாம் முறியடித்த கட்சி இன்று வீறுநடை போட்டு வருகின்றது. அதற்கான காரணம் கட்சியின் தலைவரின் உறுதியான போக்கும் வியூகமும் அயராத உழைப்புமேயாகும் .

கட்சி தலைமையின் வளர்ச்சியை பொறுக்காத ஜீரணிக்காத ஒரு சிலரின் பொறாமையின் வெளிப்பாடுகள் சிங்கள கடும் போக்காளர்கள் மற்றும் முஸ்லிம்களின் எதிர்ப்பு சக்திகளுக்கு தீனி போட்டுக் கொடுத்தார்கள்.

இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் தொழிலதிபருமான அல்ஹாஜ் ஏ.கே.அமீர் தெரிவித்தார் .

கட்சியின் அட்டாளைச்சேனை காரியாலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அட்டாளைச்சேனை அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் முதலாவதாக கூட்டிய ஊடக சந்திப்பாகும்.

அண்மைக்காலமாக கட்சியின் தேசிய தலைவர் ரிசாத் அவர்கள் முஸ்லிம் மக்களின் குரலாக மாறி வந்தார். நாடாளுமன்றிலும் வெளியிலும் முஸ்லிகளுக்கு எதிராக நடந்து வந்த அத்தனை சம்பவங்களுக்கும் குரல் கொடுத்து வந்தார் .அதனால் எமது தலைவர் மீது அபாண்டமாக பொய்யாக சில காவிகள் விசமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.எத்தனை தடை வந்தாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வீறு நடை போடும்.

கடந்த காலங்களில் அட்டாளைச்சேனையில் கட்சி எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து வந்தது.ஆனால் இனிமேல் அப்படி இருக்காது..இந்தப் பகுதியில் கட்சியயை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்வோம் .

எதிர்வரும் பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனியாக நின்று ஒரு எம்பி ஆசனத்தை வெற்றி பெறுவோம். எதிர்வரும் பொது தேர்தலில் எந்தவொரு பெரும்பான்மை கட்சியும் தனியாக ஆட்சி அமைக்கப்போவதில்லை.

இப்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அவர்கள் அமைச்செராக இல்லை. அதனால் இப்போது கட்சியில் உண்மையான தொண்டன் விசுவாசிகளை இனம் காணும் ஒரு நிலையை உருவாக்கியுள்ளது. கட்சிக்குள் உள்நோக்கம் கொண்டு மழையில் முளைத்த காளான்கள் ஒதுங்கி உண்மையான விசுவாசிகள் மற்றும் தொண்டர்களை கட்சி தலைமை இனம் காணும் நிலையை இந்த குறுகிய காலம் அமைத்துக் கொடுத்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் சிறந்த ஒருவரை கட்சி தலைமை இனங்கண்டு வேட்பாளராக நிறுத்துகின்ற போது நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அந்த வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவோம் .

இறைவன் நாடினால் எங்கள் கட்சித் தலைமையின் வெற்றி வியூகத்தின் அடிப்படையில் அதிக ஆசனங்கள் பெற்று முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக ஏக குரலாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மாறும் களம் வெகு தொலைவில் இல்லை என்றார் .







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -