இந்தியாவுக்கு நான்கு நாள் விஜமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் உட்பட சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் இன்று இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் சார்பாக பல்வேறு வேண்டுகோளை முன்வைத்துள்ளதாகவும் இதனால் மலையக மக்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படவுள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது,
மலையக மக்களின் எதிர்கால அபிவிருத்திக்கு உதவிகள் செய்யவும் நம் மக்களுக்கு சிறப்பான நன்மைகளை பெற்றுத் தருமாறும் அமைச்சரினால் இந்த சந்திப்பின் போது வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இது குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்
பிரதமர் ஊடாக மேற்கொண்ட இந்திய விஜயம் மலையக மக்களின் வாழ்க்கைக்கு வெற்றியழிக்கும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஊடாக ஜந்துநாள் விஜயத்தினை கொண்டது தொடர்பில் மலையக மக்களின் வாழ்க்கைக்கு வெற்றியழிக்குமென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார.; பிரதமர் மஹிந்தராஜபக்ஷவோடு இந்தயாவிற்கு விஜயத்தினை மேற்கொண்டு மலையக மக்கள் தொடர்பிலான பிரச்சினைகளை இந்திய நாட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய நாட்டு ஜனாதிபதி ராம்நாத் ஆகியோரோடு இலங்கை நாட்டு பிரதமர் மஹிந்தராஜபகஷ மற்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் கலந்துரையாடலை மேற்கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளதாக அமைச்சின் ஊடகபிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அமைச்சின் ஊடகபிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கபடுத்துள்ளதாவது இந்திய வம்சாவளி மக்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் கலந்துறையாடபட்டதோடு மலையகத்திற்கான இந்திய அரசாங்கத்தின் ஊடாக வழங்கபடவிருக்கின்ற தனிவீட்டுத்திட்டம் மலையகத்திற்கான பல்கலைகழகம் மலையகத்திற்கான பாடசாலை கட்டிடங்கள் கலாசாசார நிருவனங்கள் போன்றவை தொடர்பிலும் கலந்துறையாட பட்டதாகவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.






